தூண்டிலில் மீன் பிடிக்கும் திருவிழா
கொட்டாம்பட்டி அருகே தூண்டிலில் மீன் பிடிக்கும் திருவிழா நடந்தது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஓட்டக்கோவில்பட்டி கிராமத்தில் கோவிலுக்கான ஊருணி உள்ளது.
இந்த ஊருணியில் தூண்டில் போட்டு மீன்பிடித்து கொண்டாடும் விேனாத திருவிழா நடத்தப்படுகிறது. அதாவது, மற்ற நாட்களில் யாரும் தூண்டில் போட அனுமதி இல்லை.
கார்த்திகை மாத தீப திருநாளுக்கு மறுநாள் மட்டும் தூண்டில் மூலமாக யார் வேண்டுமானாலும் மீன்களை பிடித்துக்கொள்ளலாம் அங்குள்ள ஊருணியில் நாட்டு வகை மீன்களான சிலேப்பி, விரால், குரவை போன்றவை மட்டுமே வளர்க்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து, தூண்டில் போட்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
ஒவ்வொருவரும் குறைந்தது 2 கிலோ வீதம் மீன்களை பிடித்து வீடுகளுக்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்த விழாவை கொண்டாடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.