பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேருக்கு ஜாமீன்

நெல்லையில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

Update: 2022-11-21 21:58 GMT

நெல்லை மாநகரில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் மாடுகளை பிடித்து ஏலம் விட்டபோது பாரதீய ஜனதா கட்சி நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் அந்தக் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாடுகள் அவிழ்த்து செல்லப்பட்டன. இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் தயாசங்கர், நிர்வாகிகள் சுரேஷ், சங்கர சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் சார்பாக நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி திரிவேணி, மனுவை விசாரித்து 3 பேருக்கும், தினமும் காலை 10 மணிக்கு கோர்ட்டில் வந்து ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்