பி.ஏ.பி. வாய்காலில் வாலிபர் பிணமாக மீட்பு

பி.ஏ.பி. வாய்காலில் வாலிபர் பிணமாக மீட்பு

Update: 2023-05-22 19:15 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி. வாய்காலில் நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்றார்களா அல்லது குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்