அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு

தொழிலாளர் வைப்பு நிதியை செலுத்தாததால் அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதி கோரி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர்.

Update: 2023-06-27 19:00 GMT

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரர் கோவிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் குளித்தலை ஆர்.டி.ஓ. சோபாவிடம் மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு நடப்பு மாதம் வரையிலும் தங்களுடைய ஊதியத்திலிருந்து தொழிலாளர் வைப்பு நிதிக்கான பணத்தை கோவில் நிர்வாகம் பிடித்தம் செய்து கொள்கிறது. ஆனால் கடந்த 2½ ஆண்டுகளாக தங்களுடைய ஈ.பி.எப். கணக்கில் அந்தப்பணம் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோருக்கு 3 முறை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளிலும், மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈ.பி.எப். குறை தீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுடைய தொழிலாளர் வைப்பு நிதிக்கான தீர்வு எட்டப்படவில்லை. எனவே இதை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி ரத்தினகிரீசுவரர் கோவில் நிர்வாக அலுவலகத்தின் முன்பு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்