அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகே விழா நடந்தது.

Update: 2023-09-17 19:00 GMT

இளையான்குடி,


இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி, லட்சுமிபுரம், கிராம பொது மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதத்தினியுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழா காலை 9.45 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் குமாரக்குறிச்சி, லட்சுமிபுரம், கிராம பொதுமக்களும், சுற்றுவட்டார கிராமத்தினர், சிவனேச தொண்டர்களும் கலந்துகொண்டு தத்தினியுடைய அய்யனார் சுவாமி அருட்கடாட்சம் பெற்றனர். கடந்த 15-ந்தேதி அன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கும்பஅலங்காரம் அமைத்து யாகசாலை பிரவேசம் முதல் கால யாக வேள்வி தொடங்கியது. இரவு 9 மணி முதல் கால பூர்ணகுதி பிரசாதம் வழங்கப்பட்டது. 16-ந் தேதி காலை 8 மணி அளவில் 2-ம் கால யாக வேள்வி ஆரம்பித்து இரவு 8 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் 4-ம் கால யாக வேள்வி தொடங்கிகும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 9.45 மணி அளவில் ஸ்ரீதத்தினியுடைய அய்யனாரின் மூலஸ்தான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சுவாமிகளுக்கு அபிஷேகங்கள் தீபாராதனைகள் விசேஷ பூஜைகள்செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக சர்வ சாதக நிகழ்வுகளை எமனேஸ்வரமுடயவர் கோவில் மீனாட்சி சுந்தரம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விசேஷ பூஜைகள் யாகங்களை நடத்தி கும்பாபிஷேக விழாவினை செய்தனா். விழா ஏற்பாட்டினை குமாரக்குறிச்சி, லட்சுமிபுரம் கிராமத்தார்கள், கோவில் குடிமக்கள், கோவில் பரம்பரை பூசாரிகள் முத்துவேளார், சுப்பிரமணிய வேளாளர் ஆகியோர் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் வரவேற்பு நிகழ்ச்சிகளை ராமநாதபுரம் வெள்ளைச்சாமி குடும்பத்தார், குமாரக்குறிச்சி திருமாறன் குடும்பத்தார், குமாரக்குறிச்சி- லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவில் குடிமக்கள், பரம்பரை கோவில் பூசாரிகள் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டி மீனாட்சி சுந்தரம், முத்துக்காரி ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்