அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் திருஏடு வாசிப்பு

பாவூர்சத்திரம் அருகே அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் திருஏடு வாசிப்பு விழா நடந்தது.

Update: 2023-04-22 19:59 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி அகிலம் ஆளும் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை அய்யா வாகனம் பவனி வருதல், இரவு திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெற்றது. நேற்று மாலை உகப்படிப்பும், தொடர்ந்து அன்னதர்மமும் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால்தர்மமும், இரவு அய்யாவுக்கு பட்டாபிஷேகமும நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பெத்தநாடார்பட்டி, முருகன்குறிச்சி, மகிழ், இலங்காபுரிபட்டணம் பகுதி அய்யாவின் அன்பு கொடிமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்