ஆயுஸ் சுகாதார முகாம்

முனைஞ்சிப்பட்டியில் ஆயுஸ் சுகாதார முகாம் நடந்தது.

Update: 2023-09-20 20:58 GMT

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுஷ் சுகாதார திருவிழா நடைபெற்றது. நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். டாக்டர் அனிதா, அரசு சித்தா டாக்டர் வரதராஜன், யோகா பயிற்றுனர் மகாராஜன், மருந்தாளுனர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. திருமூலர் அட்டாங்க யோக பயிற்சி மற்றும் பிராணயாம பயிற்சி வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்