வெம்பக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி

ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைெபற்றது.

Update: 2023-09-07 21:19 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டையில் ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இருந்து வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தம் மற்றும் முக்கிய வீதியின் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முக சுந்தரி தொடங்கி வைத்தார். மேற்பார்வையாளர் ஆமீனா முன்னிலை வகித்தார். பேரணியில் திரவ உணவை தவிர்த்து சத்தான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். தன் சுத்தமே தலையானது. அதுவே நோயை தடுக்கும். சத்தான உணவை சாப்பிடுவோம் ஆரோக்கியமாக வளர்ந்திடுவோம், ரத்த சோகையை தடுப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சத்துணவு பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்