விழிப்புணர்வு பேரணி

தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Update: 2022-11-21 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வளவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை டாக்டர்கள் சரண்யா, சித்ரா, அனுசுயா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்