விழிப்புணர்வு பேரணி

கடையம் அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update:2023-10-26 00:30 IST

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மபுரம்மடம் ஊராட்சி இயற்கையை பாதுகாக்கும் வண்ணமும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அறவே மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குட் ஷெப்பர்டு பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டது.

பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் அனுசியா, செயலர் குமரேசன், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்