போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பூர் அரசு பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு போலீஸ் துறை, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் நிலையம் சார்பில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அன்புச்செல்வி தலைமை தாங்கினார். இதில் பெரம்பூர் போலீஸ் நிலைய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், மோகன் மற்றும் போலீஸ் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதை பழக்கத்தின் தீமைகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறினர். மேலும் போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி, போதைப்பழக்கத்தை கைவிட கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.