விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-06-24 14:38 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு குழு சார்பாக, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? பொதுமக்களை எப்படி இயற்கை பேரிடர் விபத்துக்களில் இருந்து பாதுகாப்பது? என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஹஜ்ரத் பேகம் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். தீயணைப்பு துறை அலுவலர் ஜெயராஜ் தீயணைப்புத்துறை குழுவினருடன் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்