விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோமளப்பேட்டை அரசு பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-09-29 18:45 GMT

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோமளப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்துறைப்பூண்டி சுகாதாரத்துறை சார்பில் சத்தியமூர்த்தி, ஜீவா, பட்டாபிராமன், ராஜ்மோகன், தமிழொளி ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசினர். நிகழ்ச்சியில் டெங்கு கொசு முட்டை இட்டு இனம் பெருக்கம் செய்யும் இடங்களான கொட்டாங்குச்சி, பழைய டயர், பாட்டில் மூடிகள், முட்டை ஓடுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை வீட்டில் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமாபிரபா, பள்ளி மேலாண்மை குழு தலைவி சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனபால் மற்றும் பொதுமக்கள், கிராம சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்