போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-02-08 18:50 GMT

பொன்னமராவதியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை பிரசார ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா, கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் முருகேசன், தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினர். மண்டல துணை தாசில்தார் சேகர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னமராவதி காந்திசிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், மதுப்பழக்கத்தை தவிர்ப்பீர், புத்துணர்ச்சி பெறுவீர், போதை இல்லா வாழ்க்கை அமைப்பீர், வாழ்கையில் ஏற்றம் பெருவீர் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையிலேந்தி முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகளின் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல்களை பாடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீசார், பேரூராட்சி துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்