வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update:2023-10-23 02:38 IST

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் சுப்பையன் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது பற்றியும், ஹெல்மெட், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்குவதால் விபத்துகளை தவிர்த்து விடலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்லூரி மாணவ-மாணவிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும். அவர்களுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்தவும், சாலை விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளிடமும் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினா்.

Tags:    

மேலும் செய்திகள்