தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி

விழுப்புரத்தில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி

Update: 2023-04-17 18:45 GMT

விழுப்புரம்

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளின்போது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணா, உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இக்கண்காட்சியில் தீயணைப்பு மீட்பு வாகனங்கள், பேரிடர் கால மீட்புக்கான படகுகள், ஆபத்து காலங்களில் மீட்பு பணியை மேற்கொள்ளும் துளையிடும் கருவிகள், நவீன அறுவை எந்திரங்கள், முதலுதவி உபகரணங்கள், மின்விளக்குகள், தலைக்கவசங்கள் உள்ளிட்ட ஏராளமான உபகரணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர், மேற்கண்ட உபகரணங்கள் மூலம் தீ விபத்து தடுப்பு குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இந்த கண்காட்சியானது நாளை மறுநாள்(வியாழக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும் எனவும், பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெறலாம் எனவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்