விழிப்புணர்வு பிரசாரம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.
படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முழுவதும் மாநில தலைவர்கள் தலைமையில் பிரசார வாகனம் வந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை வந்த பிரசாரக் குழுவை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சிவகங்கை நகரச்செயலாளர் முத்துக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிவகங்கை அரண்மனை வாசலில் விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகங்கை நகரச் செயலாளர் மருது, நகர துணைச்செயலாளர்கள் சகாயம், பாண்டி, ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி வந்த பிரசார குழுவுக்கு இளைஞர் பெருமன்றத்தினர் செஞ்சை பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க இடையர் தெரு-தேவர் சிலை-பெரியார் சிலை வழியாக 5 விலக்கு பகுதிக்கு அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.