ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2023-08-24 18:45 GMT

பரமத்தி வேலூர்

கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டமிகு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் கபிலர்மலை வட்டாரத்திலுள்ள 30 கிராமங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை தாங்கினார். பிரசார வாகனங்களை கபிலர்மலை வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்ட தலைவர் சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் சார்பு துறைகளின் அனைத்து நிலை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பிரசாரத்தில் வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தியும், சிறுதானியங்களில் உள்ள ஊட்டமிகு சத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பிரசார வாகனங்களில் பதாகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறுதானிய சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வினியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் விளக்கமும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்