காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு உழவர் சந்தையின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜமீன் ஆத்தூர், சில்லக்குடி கிராமங்களில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், உதவி நிர்வாக அலுவலர்கள் சதீஸ்குமார், ஷீலாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் தங்கள் காய்கறிகளை விற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.