வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு

முக கவசம் வழங்கி விழிப்புணர்வு

Update: 2022-06-27 20:24 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பொது இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட போலீஸ் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாநகரில் பல்வேறு இடங்களில் முக கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, ஜெயமுருகன், தீபா ஆகியோர் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முக கவசம் அணியக்கோரியும், அணியாதவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நாளை (அதாவது இன்று) முதல் முக கவசம் அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்