போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு
போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு
கோத்தகிரி
கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.கைகாட்டி, ஓம்நகர், குருகுத்தி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது போலீசார் கூறும்போது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், வருவாய் இழப்பு ஏற்படுதல், நினைவுத்திறன் பாதிப்பு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகிறது. மேலும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானால் அதில் இருந்து விடுபடுவது கடினம்.
எனவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, அதை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் திரிவதை கண்டாலோ அல்லது குற்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றனர்.