கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு
கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு நடந்தது.
நொய்யல் பகுதிகளில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அதிதீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர் சரஸ்வதி, சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு பற்றியும், ஓ.ஆர்.எஸ். கரைசல் தயாரிப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். பிறந்தது முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் ஓ.ஆர்.எஸ். பொட்டலம் கொடுக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.