திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சாமிக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக இதில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா உள்ளிட்ட புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.