தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கு கண்டிக்கதக்கது: வேல் முருகன்

பாமகவின் போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக வேமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-28 13:49 GMT

சென்னை,

பாமகவின் போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விலை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் NLC நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்