ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

வால்பாறையில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-20 03:15 GMT


வால்பாறை


வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட் இடைச்சோலையில் ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்ததாக டிரைவர் விவேகானந்தம் (வயது 32), பயணி செல்லத்துரை (39) ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமைகள் தாக்கியதால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவியது.. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோவை விவேகானந்தம் வேகமாக ஓட்டி சென்றதால் விபத்து நடந்ததும், காட்டெருமைகள் தாக்கியதாக கூறியது வதந்தி என்றும் தெரியவந்தது.


Tags:    

மேலும் செய்திகள்