ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை

மதுரை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-09-04 19:37 GMT

அலங்காநல்லூர்,செப்.5-

மதுரை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவர் படுகொலை

மதுரை அருகே உள்ள கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ரவி (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரியா(24) இந்தநிலையில் நேற்று பகலில் ரவி கோவில் பாப்பாகுடி பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ரவியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதில் நிலைகுலைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசில் புகார்

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த குமார், மருதமுத்து ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். தொழில் போட்டியில் கொலை நடந்ததா? முன்பகையில் நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ெகாலை செய்யப்பட்டவரின் சொந்த ஊர் மதுரை பெத்தானியாபுரம் ஆகும்.

இதுபற்றிய புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா, பாண்டி வேல், செல்வம் ஆகியோரை அலங்காநல்லூர் போலீசார் தேடி வருகிறார்கள்.பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்