ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட ஆடியோ விவகாரம்: கே.பி.முனுசாமி விளக்கம்

தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர் என கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-02-16 12:24 GMT

சென்னை,

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல் வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தன்னிடம் ரூ 1 கோடி பேரம் பேசிய ஆடியோவையும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் பேசும் நபர் அண்ணே வணக்கம் நான் கிருஷ்ணமூர்த்தி என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசும் நபர் (கே.பி. முனுசாமி என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்) சொல்லுமா என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசிய நபர் 50 ரெடி செய்துவிட்டேன்,. அதை 11 மணிக்கு கொடுத்துவிடுகிறேன். மீதமுள்ள 50ஐ மாலைக்குள் ரெடி செய்கிறேன், தற்போது முதல் 50 பணத்தை எங்கே கொண்டு வரட்டும் என கேட்டார்.

அதற்கு முனுசாமி என சொல்லப்படும் நபரோ நான் என் மகனை அனுப்புகிறேன். அவரிடம் கொடுத்துவிடு என்கிறார். இந்த ஆடியோவை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு போட்டு காண்பித்தார். மேலும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் கே.பி. முனுசாமி ஓபிஎஸ் கட்சிக்கு என்ன செய்தார் என கேட்கிறார்.

ஆனால் இந்த ஆடியோ மூலம் கே.பி .முனுசாமி பணத்திற்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் மட்டுமே உழைப்பவர் என தெரியவந்துவிட்டது. இதை தொண்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் நான் இந்த ஆடியோவை வெளியிட்டேன். அவர் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாவிட்டால் அவர் குறித்த வீடியோவையும் வெளியிடுவேன், அது போல் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.

இந்தநிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில்,

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல் தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்