ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-06-13 14:01 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி ்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கால்நாட்டு விழா

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி ்கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகத்திற்கான கால்நாட்டு விழா நடைபெற்றது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சாகுபுரம் டி.சி.டபுள்யூ மூத்த செயல் உதவி தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் கால்நாட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கடந்த 3-ந் தேதி காலையில் இருந்து கும்பாபிஷேக பூஜைகள் நடந்து வந்தன. முதல் நாள் கணபதி ஹோமம் மற்றும் கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. தினமும் இரவில் பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன. கடந்த 10-ந் தேதி யாகசாலை பூஜை நிர்மாணம் செய்யப்பட்டு சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. 11-ந்தேதி முதல்கால யாகசாலை பூஜையும் மாலையில் இரண்டாம் கால பூஜையும் சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. 13-ந்தேதி காலை 3மணி அளவில் ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

சரியாக 6.20 மணி அளவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக பூஜை நடைபெற்றது.

இதனை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை ஏற்று நடத்தினார்.

கும்பாபிஷேகம்

மேலும் அவருடன் திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயாவின் முதல்வர் ராஜா பட்டரும் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சுவாமி கோவில் அர்ச்சகர் செல்வம் பட்டர், மற்றும் ஆத்தூர் கோவில் அர்ச்சகர் குமாரசாமிபட்டர் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதம் ஓத ஒரே நேரத்தில் 3 விமானங்களிலும் சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு இருந்து கோவிலை சுற்றி குவிந்து இருந்து தரிசனம் செய்தனர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

அவருடன் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, சாகுபுரம் டி.சி.டபுள்யூ தொழிற்சாலை மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன், அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன், ஏரல் சேர்மன் சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ர.க.. அ. கருத்தபாண்டிய நாடா, ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் பள்ளி தாளாளரும் சென்னை தொழிலதிபருமான ச.ராஜரத்தினம் நாடார், ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் தாளாளர் சுப்பையா, அவரது துணைவியார் உஷா சுப்பையா, ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் ஆஸ்தான ஸ்தபதி ஆத்தூர் ஆர்.எஸ். ஸ்ரீதர் மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவரும் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ஏ. பி. சதீஷ்குமார், யூனியன் கவுன்சிலர்கள் மாரிமுத்து, ரகுராமன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமால்தீன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவரும் ஆத்தூர் நகர செயலாளருமான எம். பி. முருகானந்தம், திருச்செந்தூர் கோவில் முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை சுப்பிரமணியம், ஆத்தூர் மணி ஹோட்டல் குரூப்ஸ் நிறுவன மேனேஜிங் டைரக்டர் தமிழ்செல்வன், ஏரல் கே.சின்னத்துரை அன் கோ பங்குதாரர் செல்வராஜ் நாடார், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ரெ.சா. வெங்கடேஷ், ஆத்தூர் சைவ வேளாளர் சங்க தலைவர் ஆண்டியப்பன், செயலாளர் கார்த்திகேயன், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை அமைப்பாளர் வி. சுப்பிரமணியம், ஆத்தூர் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், கோவில் கும்பாபிஷேகம் கமிட்டி தன்னார்வலர் ரவி மற்றும் ஆத்தூர் மக்கள் இயக்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

தொடர்ந்து அமைச்சர் கோவில் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் செந்தில் நாயகி, செயல் அலுவலர் ஜெயந்தி மற்றும் கோவில் முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்