தர்மபுரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தர்மபுரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-23 16:29 GMT

தர்மபுரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விஷம் குடித்தனர்

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவராசன் என்பவரது மகன் சிலம்பரசன் (வயது 22). இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு திடீரென மாயமானார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு சிலம்பரசன், மாணவியுடன் சென்றுள்ளார். அப்போது அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் மனமுடைந்த சிலம்பரசன், தனது காதலியான மாணவியுடன் விஷம் குடித்து விட்டு இருவரும் அந்த பகுதியில் மயங்கி கிடந்தனர்.

போக்சோ வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், சிலம்பரசன் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்