கடலூர் முதுநகரில் 2 கடைகளில் கொள்ளை முயற்சி

கடலூர் முதுநகரில் 2 கடைகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா்.

Update: 2022-07-23 17:31 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகரில் சிதம்பரம் சாலையில் பக்தவச்சலம் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்குள்ள 2 மளிகை கடைகளில், மர்ம நபர்கள் 2 பேர் பூட்டை உடைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். உடனே 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி வணிகர் சங்கத்தினர் கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்