ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 20:37 GMT


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி புதூரை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி காளியம்மாள் (வயது 70). இவர் மனு கொடுப்பதற்காக நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது நுழைவு வாயில் பகுதியில் நின்றிருந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதற்கிடையில் அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை கவனித்த போலீசார், காளியம்மாளிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்து அவரை போலீஸ் உதவி மையத்தில் அமர வைத்தனர். பின்னர் காளியம்மாள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

விளைநிலம்

அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். எனக்கு ஈஸ்வரி என்ற மகள் உள்ளார். எங்களுக்கு சொந்தமான பரம்பரை விளைநிலம் 4.28 ஏக்கர் சென்னம்பட்டிபுதூரில் உள்ளது. இந்த நிலத்தில் நான் குடிசை அமைத்து வசித்து வருவதோடு, விவசாயமும் செய்து வருகிறேன். இந்த நிலையில் எனது நிலத்தில் 10 சென்ட் இடத்தை, இன்னொருவர் எனக்கு தெரியாமல் மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த நிலத்தை வாங்கியவர் விளை நிலத்தின் நடுவே, கம்பி வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தும்போது, தான் எனக்கு தெரியவந்தது. இதுபற்றி நான் வருவாய் துறை மற்றும் போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எனது நிலத்தை மீட்டு எனக்கே வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்