கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயற்சி - 8 பேர் கைது

சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.;

Update:2023-11-09 16:56 IST

நாகை,

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா மூட்டைகளை விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை மேலப்பிடாகை அருகே தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்