முதியவரை தாக்கியபஞ்சாயத்து துணைத்தலைவர் மீது வழக்கு

நாலுமாவடியில் முதியவரை தாக்கிய பஞ்சாயத்து துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-23 18:45 GMT

தென்திருப்பேரை:

குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் உள்ள பாதக்கரை சுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக அழகேசன் தரப்பினருக்கும், ராஜேஷ் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகேசன் தரப்பை சேர்ந்த லோகநாதன் (வயது 72) என்பவர் கடந்த 21-ந்தேதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவரும், பஞ்சாயத்து துணைத்தலைவருமான ராஜேஷ், அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், வாக்குவாதம் முற்றவே, ராஜேஷ் லோகநாதனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லோகநாதன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜேஷ் லோகநாதன மீது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்