அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் - வாலிபர் கைது

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-11-27 20:31 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

டிரைவர் மீது தாக்குதல்

உசிலம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 57). இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று உசிலம்பட்டியில் இருந்து தொட்டப்ப நாயக்கனூர் செல்லும் அரசு நகர பஸ்சை சுப்பிரமணி ஓட்டி சென்று உள்ளார். அப்போது தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த பிரவீன் (25), கண்ணன் (55) ஆகிய 2 பேரும் மதுபோதையில் பஸ் டிரைவர் சுப்பிரமணியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து டிரைவர் சுப்பிரமணி உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்