விளாத்திகுளம், புதூரில்159 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

விளாத்திகுளம், புதூரில் 159 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

Update: 2023-03-16 18:45 GMT

எட்டயபுரம்:

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசா பேகம் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, விளாத்திகுளம் போலீஸ் துணைசூப்பிரண்டு ஜெயச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பேரிச்சைபழம், புரோட்டின் பவுடர், இரும்புச்சத்து டானிக், அல்பெண்டசால் மாத்திரைகள், பல்வேறு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை 105 தாய்மார்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புதூரில் பாலூட்டும் தாய்மார்கள் 54 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, புதூர் மருத்துவ அலுவலர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்