மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 22:24 GMT

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்தியூர்

அந்தியூரில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் வட்டார தலைவர் கற்பகம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

தகுதிவாய்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்கவேண்டும். 5 ஆண்டு பணி முடிந்த குறுமைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் வட்டாரத்தில் பணி புரியும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசி வரவேற்று பேசினார். முடிவில் வட்டார துணைத்தலைவர் வரலட்சுமி நன்றி கூறினார்.

கோபி

இதேபோல் கோபியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மைய அலுவலகம் முன்பு, அங்கன்வாடி பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் வெங்கிட்டம்மாள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

சத்தியமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் விஜயா தலைமை தாங்கினார். செயலாளர் கலைவாணி முன்னிலை வகித்தார். 150 பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

குருமந்தூர்

நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

டி.என்.பாளையத்தில் வட்ட தலைவர் பூங்கொடி தலைமையில் டி.என்.பாளையம் ஒருங்கிணைந்த பள்ளி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்