தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விரால் மீன் வளர்ப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விரால் மீன் வளர்ப்பு பயிற்சி வருகிற 8-ந் தேதி நடக்கிறது

Update: 2022-12-02 18:45 GMT

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ப.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 'விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில் நுட்பம்' பற்றிய ஒரு நாள் வளாக பயிற்சி வருகிற 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கிலோ பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் செல்போன் மூலமாக அல்லது உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி -628 008, செல்போன் எண்கள் 8072208079, 9600205124, மின் அஞ்சல்: anix@tnfu.ac.in, betsy@tnfu.ac.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்