திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று வந்தார். கோவிலில் மூலவருக்கு நடந்த உச்சிகால அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.