"ஆந்திராவின் 175 தொகுதிகளிலும் வெல்வோம்" - திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த ஆந்திர மாநில மந்திரி ரோஜா பேட்டி!

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-05-18 02:58 GMT

திருச்செந்தூர்,

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியான ரோஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

திருச்செந்தூர் கோவிலுக்கு பல வருடங்கள் கழித்து வந்துள்ளேன். கோவிலுக்கு வருகை தந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். அவர் மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சியை இரு கண்ணாக கருதி தனது பணியினை செய்து வருகிறார். இதனால், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் எதுவாக இருந்தாலும் மக்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நாங்கள் 175 இடங்களையும் கைப்பற்றி வெற்றிபெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்