ஸ்பிக்நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஸ்பிக்நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2022-10-14 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வியக்கும் விஞ்ஞானம் 2022 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாரின் பொது மேலாளர் பி.செந்தில் நாயகம் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளிச் செயலர் பிரேம் சுந்தர், தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக்நகர் ரோட்டரி தலைவர் அருண் ஜெயக்குமார், செயலாளர் சரவணகுமார், ரோட்டரி உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முப்பாட பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 10 முதல் 12- ம் வகுப்பு மாணவர்கள் விளக்கக் காட்சியின் மூலம் எதிர்கால அறிஞர்களாக மாறி விளக்கம் அளித்து வியப்பட செய்தனர். பல்வேறு மன்றத்தின் சார்பாக திடக்கழிவு மேலாண்மை என்ற தலைப்பிலும் தங்களது விஞ்ஞான அறிவை பயன்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் மாணவர்கள் தங்களது திறமையை பல்வேறு ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தினர். முடிவில் ரோட்டரி தலைவர் அருண் ஜெயக்குமார், விழா தலைவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்