கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாளர்கள் போராட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாளர்கள் போராட்டம்
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவரும் சக்திவேல் என்பவர் தாக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள். கண்காணிப்பாளர் சக்திவேலை தாக்கியவர் மீது தமிழக அரசு மற்றும் போக்குவரத்து ஆணையர் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடந்தது.