பலசரக்கு கடையில்சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு

தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டது.

Update: 2023-02-05 18:45 GMT

தூத்துக்குடி வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் பற்குணராஜ். இவருடைய மகன் சிவராஜ் (வயது 31). இவர் ராம்தாஸ் நகர் பகுதியில் மளிகைக் கடை வைத்து உள்ளார். வழக்கம் போல் சிவராஜ் கடையை பூட்டி விட்டு சென்றாராம். நேற்று முன்தினம் காலையில் கடையை மீண்டும் திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராஜ், கடையின் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு இருந்த ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்