தேரியூர் செங்கருட பெருமாள் சுவாமி கோவிலில்ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
தேரியூர் செங்கருட பெருமாள் சுவாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடன்குடி:
தேரியூர் செங்கருட பெருமாள் சுவாமி கோவிலில் உள்ள செல்வ சிரஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மார்கழி மாத பஜனையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, துளசிமாலை சாத்தப்பட்டு வெண்பொங்கல், குலைவாழை, இளநீர், பூந்தி, கற்கண்டு, ஜிலேபி ஆகியவை படைக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டு பஜனை, மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.