சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கு ஏலம் போனது.

Update: 2022-07-12 22:25 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.225-க்கும், செண்டுமல்லி ரூ.47-க்கும், பட்டுப்பூ ரூ.81-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்