சாத்தான்குளம் நூலகத்தில்இல்லம்தேடி கல்வி மைய ஆண்டு விழா

சாத்தான்குளம் நூலகத்தில் இல்லம்தேடி கல்வி மைய ஆண்டு விழா நடந்தது.

Update: 2023-02-06 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து இல்லம் தேடி கல்வி மைய ஆண்டு விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின்ராபின் தலைமை தாங்கினார். மாணவி ஆன்ட்ரியாஜான்சி வரவேற்றார். விழாவில் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் கோபிகா, சின்ன இசக்கி, ஜீவா, தீபிகா ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கி பேசினர். இல்லம் தேடி கல்வி மையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, யோகா ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோர் பேசினர்.

இதில் யோகா பயிற்றுனர் கமலம், வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார், நூலக பணியாளர் மைக்கேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்