வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-31 18:35 GMT

இடைத்தரகர்கள்

ராணிப்பேட்டையில் பாரதிநகருக்கு செல்லும் வழியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், புதிய வாகனம் பதிவு செய்தல், பழைய வாகனங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திறந்த வெளியில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான சேவையை பெற முடியாத சூழல் உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இடைத்தரகர்களுக்கு கூடுதல் பணம் வழங்கினால் மட்டுமே அனைத்து பணிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓட்டுனர் உரிமத்தின் அடையாள அட்டை வழங்கும் பிரிவு தனியாரிடத்தில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன என்பதை மறந்து செயல்படும் இத்தகைய அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பொது மக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்