குலையன்கரிசல் ஆலயத்தில்புதிய கோபுர மண்டபம் திறப்பு விழா
குலையன்கரிசல் ஆலயத்தில் புதிய கோபுர மண்டபம் திறப்பு விழா நடந்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசலில் உள்ள அபிஷேகநாதர் ஆலயத்தில் புதிய கோபுரமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் நிகர் பிரின்ஸ் கிப்ஸன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஆசீர் ஆட்டோ உரிமையாளர் ராஜ்குமார், புதுக்கோட்டை செல்வம் குரூப் கம்பெனி நிர்வாக இயக்குனர் ராஜாஜெபதாஸ், தூத்துக்குடி தொழில் அதிபர் எஸ்.ஆர்.ஆல்பர்ட் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் சாந்தகுமார் வரவேற்றார். சபை குரு கிருபாகரன் இம்மானுவேல் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். புதிய கோபுர மண்டபத்தை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முன்னாள் பேராயர் ஜோசப் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் வேதமாணிக்கம் என்ற மதிசிலன் மற்றும் சபை நிர்வாகிகள் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.