எட்டயபுரத்தில்தி.மு.க.அரசின் சாதனை விளக்க கூட்டம்

எட்டயபுரத்தில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க கூட்டம்

Update: 2023-05-16 18:45 GMT

எட்டயபுரம்:

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

இக் கூட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் இமானுவேல், கட்சி பேச்சாளர் கரூர் முரளி, தமிழ் பிரியன், மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் சௌந்தர்ராஜன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து எட்டையபுரம் அருகே உள்ள கடலையூர் கிராம பஸ்நிறுத்தம் அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்