ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
புதிய பஸ் நிலையம்
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையொட்டி மதுரை, கரூர், பழனி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களை நிறுத்தும் வகையில் ஈரோடு சோலாரில் புதிதாக தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அங்கு நிலத்தை சீரமைத்து தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.