ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நாளைகோரிக்கை மனு பெட்டி அமைப்பு

ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு பெட்டி நாளை வைக்கப்படுகிறது

Update: 2023-06-01 20:27 GMT

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) கோரிக்கை பெட்டி வைக்கப்படுகிறது.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வீட்டு வசதி வாரிய திட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக தங்களது கோரிக்கை மனுக்களை இந்த பெட்டியில் போடலாம். அலுவலக வேலை நாட்களில் மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்படும்.

இந்த தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்